மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்; 4.92 லட்சம் பேர் கைது + "||" + Curfew violation in Tamil Nadu; 4.92 lakh arrested

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்; 4.92 லட்சம் பேர் கைது

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்; 4.92 லட்சம் பேர் கைது
தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட 4.92 லட்சம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்களில் பலர் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர்.  அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 லட்சத்து 65 ஆயிரத்து 241 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 3 ஆயிரத்து 777 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை ரூ.6.39 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த ஏப்ரல் 16ந்தேதி முதல் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி; தம்பதி கைது
பண்ருட்டி அருகே விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
2. பண்ருட்டி அருகே பயங்கரம்: தந்தை அடித்துக் கொலை; கல்லூரி மாணவர் கைது
பண்ருட்டி அருகே தந்தையை அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. மணல் கடத்திய 3 பேர் கைது
மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சாங்கியம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
4. சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை
சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த தாய், மகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
5. நாமக்கல் அருகே நிலத்தரகர் கொலையில் 5 பேர் கைது
நாமக்கல் அருகே நிலத் தரகர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.