பரனூர் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்
செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி நீண்ட நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்த சுங்கச்சாவடி நேற்று முன்தினம் நள்ளிரவு முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டது.
இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.
இதனால் அந்த வழித்தடத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் சென்னை, திருச்சி என இரு மார்க்கங்களிலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடியில் அதிக அளவு வாகனங்கள் வருவதால் செங்கல்பட்டு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக கருதப்படுகிறது

Related Tags :
Next Story