பாஜகவில் இணைந்தார் விபி துரைசாமி
விபி துரைசாமியிடம் இருந்து நேற்று திமுக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது.
சென்னை,
பாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமியின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் தமிழக பாஜக தலைமையகமான கமாலயம் சென்ற விபி துரைசாமி, அக்கட்சி தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர் திமுகவின் முக்கியப் பொறுப்பான துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.
Related Tags :
Next Story