மாநில செய்திகள்

கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு குமரகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் ரத்து + "||" + Vaikasi Visakha festival at Kumarakottam Murugan Temple canceled

கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு குமரகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் ரத்து

கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு குமரகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் ரத்து
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக உற்சவம் நடைபெறும்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக உற்சவம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதி தடை செய்யப்பட்டு உள்ளது.


எனவே காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக உற்சவம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான என்.தியாகராஜன் தெரிவித்தார்.

மேலும் கோவிலில் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் மற்றும் இதர நிகழ்வுகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.