பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும் மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும் மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 May 2020 9:33 PM GMT (Updated: 24 May 2020 9:33 PM GMT)

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும் மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொதுத்துறை வங்கிகளில் கடன்பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் கடுமையானவை ஆகும். அதன் காரணமாகவே பெரும்பான்மையான மக்கள் தனியார் அடகுக்கடைகளை தேடிச்சென்று அதிக வட்டிக்கு கடன்வாங்கி மீளமுடியாத கடன்சுமையில் சிக்கிக்கொள்கின்றனர். பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்குவதன் மூலம் இந்நிலையை மாற்றலாம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அரசு சார்பில் பெரியளவில் நிதியுதவி வழங்கமுடியாத சூழலில் மக்களுக்கு குறைந்தவட்டியில் கடனாவது கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். மற்றொருபுறம் கடன்வாங்க ஆளில்லாதநிலையில் பொதுத்துறை வங்கிகள் தங்களிடம் இருந்த பணத்தில் ரூ.10 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியில் வைப்பீடு செய்துள்ளன. இது வங்கிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தும். பொதுத்துறை வங்கிகளில் நகைக்கடன் பெற விரும்புவோருக்கு வங்கிக்கணக்கு இல்லை என்றால் உடனடியாக புதியகணக்கு தொடங்கி, சிலமணி நேரங்களில் நகைக்கடன் வழங்கவேண்டும். அதேபோல், வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ஓராண்டில் திருப்பிசெலுத்தும் வகையில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் சிறுகடனை குறைந்த வட்டியில் வழங்கவேண்டும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்பதால் இதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் செயல்படுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story