மாநில செய்திகள்

செங்கல்பட்டில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona impact confirmed at 45 additionally in Chengalpattu

செங்கல்பட்டில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியானது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றுவரை 245 பேர் குணமடைந்துள்ளனர்.  513 பேர் சிகிச்சை பெற்றும் 6 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து, கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை செங்கல்பட்டில் 824 ஆக உயர்வடைந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்பானிஷ் ப்ளூவை தொடர்ந்து கொரோனாவில் இருந்தும் தப்பிய 106 வயது முதியவர்
டெல்லியில் 106 வயது நிறைந்த முதியவர் ஒருவர் ஸ்பானிஷ் ப்ளூவை தொடர்ந்து கொரோனாவில் இருந்தும் விடுபட்டு ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளார்.
2. அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்பின் காதலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,308 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 308 ஆக உயர்ந்துள்ளது.
4. சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 24 பேர் உயிரிழப்பு என தகவல்
சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. இந்தியாவில் விரைவில் கொரோனாவுக்கு தடுப்பூசி? மனிதர்களிடையே பரிசோதிக்க மேலும் ஒரு மருந்துக்கு அனுமதி
இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.