மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரி மனு


மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரி மனு
x
தினத்தந்தி 25 May 2020 8:45 PM IST (Updated: 25 May 2020 8:45 PM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் என பல்வேறு தரப்பினர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சார்பாக பல்வேறு நிவாரண உதவிகள் செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 5,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று தொடரப்பட்டுள்ள இந்த மனுவுக்கு வரும் 29ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story