ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு


ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
x
தினத்தந்தி 26 May 2020 4:23 PM GMT (Updated: 26 May 2020 4:23 PM GMT)

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அதிமுகவினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த ஜெ.தீபா, தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தங்களையே நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

இதனிடையே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள் நாளை காணொலி காட்சி வாயிலாக வழங்குகின்றனர்.

Next Story