மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாடங்களை குறைக்கத் திட்டம்? + "||" + corona Crisis :Due to delayed opening of schools in Tamil Na The school department is reportedly planning to cut the lessons.

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாடங்களை குறைக்கத் திட்டம்?

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாடங்களை குறைக்கத் திட்டம்?
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் காலதாமதமாக பள்ளிகள் திறப்பக்கப்படுவதால் பாடங்களை குறைக்கத் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை

கொரோனா தொற்று தீவிரத்தின் காரணமாக வழக்கமாக ஜூனில் திறக்கப்படும் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை நெருக்கமாக அமரவைத்து  வகுப்புகளை நடத்துவது சவலாக இருக்கும் என்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை காலையிலும் 6 முதல் 12 வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.

இந்த காலதாமதத்தின் காரணமாக வழக்கமாக பாடங்களை நடத்தி முடித்து உரிய காலத்தில் தேர்வுகள்  வைக்கும் நடைமுறை வரும் கல்வியாண்டில் சவாலானதாக இருக்கும்.

இத்தகைய சூழலில் தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை கடைபிடிக்கப்பட்டு வரும் முப்பருவ முறையில் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதன்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள முப்பருவ பாடமுறையில் 1 பருவ பாடத்தை கைவிடுவது என பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோன்று வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும்  10  மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கை அதிகம். ஏற்கனவே புதிய பாடத்திட்ட அடிப்படையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடச் சுமை அதிகமாக இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர் குறைக்கவும் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த சூழலில்  குறுகிய நாட்களுக்குள் பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டி உள்ளதால் முழுமையாக பாடங்களை நடத்தி முடிப்பது பெரும் சிரமம். இந்த நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
கொரோனா தாக்கத்தால் தற்போது பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நெருக்கடி காலத்தில்‘உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது’ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயலாளர் பாராட்டு
கொரோனா நெருக்கடி காலத்தில்‘உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது’ என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. கொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்
கொரோனா நெருக்கடி தொடர்பாக இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி உள்ளன.
3. கொரோனா நெருக்கடியில் எதிர்க்கட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ராகுல்காந்தி உதாரணமாக திகழ்கிறார் - சிவசேனா பாராட்டு
கொரோனா பிரச்சினையால் ஏற்பட்டு உள்ள நெருக்கடியில் எதிர்க்கட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ராகுல்காந்தி உதாரணமாக திகழ்கிறார் என்று சிவசேனா பாராட்டி உள்ளது.