மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி + "||" + corona 22 killed in Chennai in last 24 hours

கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி

கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் மட்டும் 22 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை

தமிழகத்தில் 19,372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 145 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,304 ஆக உள்ளது.

கொரோனாவால், கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.ஸ்டான்லி மருத்துவமனையில் 7  பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு 
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர், ஐஐடி ஊழியர் ஒருவர் உயிரிழப்பு

 கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள். திருவொற்றியூரை சேர்ந்த 34 வயது ஆண், வியாசர்பாடியை சேர்ந்த 45 வயது ஆண் , பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 68 வயது முதியவர், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 77 வயது முதியவர் என 4 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு. அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோடம்பாக்கம் - 1646 பேர்
தேனாம்பேட்டை - 1412 பேர் 
திரு.வி.க நகர் - 1393 பேர்
தண்டையார்பேட்டை - 1322 பேர்
அண்ணாநகர் - 1089 பேர் 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை- சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் கூறி உள்ளார்.
2. ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது மற்றும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
3. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
சென்னை முழுவதும் மொத்தமாக 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
4. கொரோனா பாதிப்பு : தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது
கொரோனா பாதிப்பு: தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது.
5. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.