மாநில செய்திகள்

சென்னையை தவிர்த்து, அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு + "||" + About 50 per cent of the buses are operating except in the districts of Chennai, Kanchipuram, Thiruvallur and Chengalpattu.

சென்னையை தவிர்த்து, அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு

சென்னையை தவிர்த்து, அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத  பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெிளியிட்டுள்ள அறிக்கையின் படி,  மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகின்றன.

\மண்டலம் 1  : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம் 2 : தருமபுரி, வேலுhர், திருப்பத்துhர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுhர் மற்றும் கள்ளக்குறிச்சிமண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலுhர், பெரம்பலுhர் மற்றும் புதுக்கோட்டை
மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மண்டலம் 6:  துhத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

மண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் 8-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை  என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.

அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளா, ஆந்திராவில் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டம்
கேரளா, ஆந்திராவில் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2. உகான் நகரில் 2 மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது
கொரோனா வைரசின் தாய் மண்ணாகக் கருதப்படும் சீன நாட்டின் உகான் நகரில், கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று சகஜநிலை திரும்பியது.