சேமித்த ரூ.5 லட்சத்தை கொரோனா நிவாரணமாக வழங்கியவர்: “பிரதமரின் பாராட்டு என் மகளைத்தான் சேர வேண்டும்” மதுரை சலூன் கடைக்காரர் பெருமிதம்
சேமித்த ரூ.5 லட்சத்தை கொரோனா நிவாரணமாக ஏழை மக்களுக்கு வழங்கிய மதுரை சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்த பாராட்டு தனது மகளைத்தான் சென்று சேர வேண்டும் என அந்த சலூன் கடைக்காரர் பெருமிதத்துடன் கூறினார்.
மதுரை,
பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மான்கிபாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார்.
அதன்படி பிரதமர் மோடி, நேற்று இந்த நிகழ்ச்சியில் பேசும் போது, “கொரோனா காலத்தில் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள் என அனைவரும் சேவையாற்றி வருகின்றனர். அவர்களை போல எண்ணற்ற மக்களும், பிறருக்கான சேவையில் தங்களை அர்ப்பணித்து உள்ளனர். அதற்கு உதாரணம் தமிழகத்தை சேர்ந்த சி.மோகன். இவர் மதுரையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகள் படிப்புக்காக ரூ.5 லட்சம் சேமித்து வைத்திருந்தார். அந்த சேமிப்பு பணத்தை அவர் ஏழைகளுக்கு வழங்கி உள்ளார்” என்று பாராட்டினார்.
பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மோகன், மதுரை மேலமடையில் சலூன் கடை வைத்திருக்கிறார். பிரதமரின் பாராட்டை தொடர்ந்து மோகனுக்கு மேலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புகாக மதுரை வந்தேன். இங்கு சலூன் கடை வைத்திருக்கிறேன். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறேன்.
எனது மகள் நேத்ரா 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளது படிப்புக்காக எனது வருமானத்தில் சிறுக, சிறுக வங்கியில் சேமித்து வந்தேன். அந்த பணம் ரூ.5 லட்சம் இருந்தது.
கொரோனா காரணமாக அனைத்து தொழிலும் முடங்கி விட்டது. நானும் கடை திறக்கவில்லை. ஆனால் எனது வாழ்வாதாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டார்கள். சிலர் என் வீட்டிற்கு வந்து தங்களது கஷ்டத்தை சொல்லினர். இதனையெல்லாம் பார்த்த எனது மகள், வங்கியில் தனது படிப்பிற்காக சேமித்து வைத்துள்ள பணத்தை எடுத்து செலவு செய்யுங்கள் என்றாள். ஆனால் நானும், எனது மனைவியும் முதலில் தயங்கினோம். ஆனால் மகள் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த சேமிப்பு பணத்தை எடுத்து ஏழை எளியோருக்கு உதவி செய்ய தொடங்கினோம்.
மொத்தம் 1500 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் எண்ணெய் போன்றவை வழங்கினோம். அதற்காக ரூ.5 லட்சமும் செலவானது. அதன் பின்னும் சிலருக்கு உதவுவதற்காக எனது மனைவியின் நகையை அடமானம் வைத்து உதவி செய்தோம். இன்னும் பலருக்கு உதவ உள்ளோம்.
சாதாரண சலூன்கடை வைத்திருக்கும் இந்த சாமானியனின் சிறிய சேவையை பார்த்து நாட்டின் பிரதமரே பாராட்டியதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது தமிழகத்திற்கும், மதுரை மண்ணுக்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
இந்த பெரிய பாராட்டும், பெருமையும் கிடைக்கும் என அந்த உதவியை செய்தபோது நான் எதிர்பார்க்கவே இல்லை. பிரதமரின் இந்த பாராட்டு என் மகளைத்தான் சேர வேண்டும். ஏனென்றால் நான் உதவி செய்ததற்கு அவளது வற்புறுத்தல்தான் முக்கிய காரணம்.
பிரதமரின் இந்த பாராட்டு, நான் வாழ்நாள் முழுவதும் சேவை செய்வதற்கு அடித்தளமாக அமைந்து விட்டது. எனது மகள் நேத்ரா ஐ.ஏ.எஸ் படித்து கலெக்டராக ஆசைப்படுகிறாள். அவளை நன்றாக படிக்க வைப்பேன்.

Related Tags :
Next Story