2 பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: ஓட்டுநர்கள் மகிழ்ச்சி
சென்னையில் 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை,
தமிழகத்தில் 4ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது ஆட்டோக்கள் இயங்குவதற்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் அதுகுறித்த எந்தவொரு அறிவிப்பும் இல்லை.
தமிழகத்தில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் (ஜூன் 1ஆம் தேதி முதல்) சலூன்கள், அழகு நிலையங்கள், ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று முதல் அரசு விதித்த நிபந்தனைகள் படி ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி உள்ளன. இந்நிலையில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 பயணிகளை மட்டும் ஏற்றுவோம் என கூறுவதால், குழந்தைகளை அழைத்து வருபவர்கள் ஆட்டோக்களை பயன்படுத்த தயங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story