காட்மேன் இணையதள தொடர் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
காட்மேன் இணையதள தொடர் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
இளங்கோ ரகுபதியின் தயாரிப்பிலும் , பாபு யோகேஸ்வரனின் இயக்கத்திலும் காட்மேன் வெப்சீரிஸ் தொடர் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் 12-ம் தேதி ஜி5 நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் வெளியிடப்பட இருக்கிறது. முன்னதாக இந்தத் தொடரின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களில் போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். வெப்சீரிஸ் தொடர்களுக்கு சென்சார் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து அந்த டீசரை நீக்கினர்.
இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார் காட்மேன் தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.
காட்மேன் இணைய தொடரில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மதத்தினரை அவதூறாக சித்தரிப்பதாக அளித்த புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story