அதிமுக அரசு மீதான ஊழல் புகாரில் கடுகளவும் பின்வாங்கமாட்டோம் - ஆர்.எஸ்.பாரதி
அதிமுக அரசு மீதான ஊழல் புகாரில் கடுகளவும் பின்வாங்கமாட்டோம் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, பட்டியல் இன மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமின் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, அதிமுக அரசு மீதான ஊழல் புகாரில் இருந்து கடுகளவும் பின்வாங்க மாட்டோம். எங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு மக்களை அரசு காப்பாற்ற வேண்டும்.

அதிமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தை கைவிட்டு கொரோனாவை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story