தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மரணம்


தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மரணம்
x
தினத்தந்தி 1 Jun 2020 10:12 PM IST (Updated: 1 Jun 2020 10:12 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் (92) உடல்நலக்குறைவால் காலமானார்.

சேலம்,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் (வயது 92) உடல்நலக்குறைவால் காலமானார்.

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கே.என். லட்சுமணன்(92) சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு முறை தலைவராக இருந்த கே.என். லட்சுமணன், ஒரு முறை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.

பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.


Next Story