சென்னை போலீசில் புதிதாக 52 பேருக்கு கொரோனா குணம் அடைந்து பணிக்கு திரும்பியகூடுதல் கமிஷனருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
சென்னை போலீசில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நோயில் இருந்து குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பிய கூடுதல் போலீஸ் கமிஷனருக்கு கமிஷனர் அலுவலகத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை,
உயிர்க்கொல்லி நோயான கொரோனாவின் கொடூர தாக்குதல் சென்னை போலீசில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை போலீசில் கூடுதல் கமிஷனர் மற்றும் 2 துணை கமிஷனர்கள், 7 உதவி கமிஷனர்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 50-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 318 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதுவரை இல்லாத வகையில் புதிதாக ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர் உள்பட 52 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 370 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சென்னையில்
குடும்பத்துடன் வசிக்கிறார். அவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசில் பணியில் உள்ளார். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் பூரண குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பினார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவருக்கு போலீஸ் பேண்டு வாத்தியம் முழங்க, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி வரவேற்றார். மேலும் குணமடைந்து பணியில் சேர்ந்த உதவி போலீஸ் கமிஷனர்கள் பாலகிருஷ்ணபிரபு, ஜெயராமன் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள், 12 சப்-இன்ஸ்பெக்டர்கள், 31 போலீசாருக்கும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Related Tags :
Next Story