பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை,
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா கட்டுக்குள் வராததால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நிலவியது.
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இந்தநிலையில் பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேலும் வெளியூர் மாணவர்கள் பலர் தங்கள் புத்தகங்களை விடுதிகளில் விட்டுச் சென்றுள்ளனர். மாணவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். எனவே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்' என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story