தமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல்
தமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்டவை அடங்கிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மேலும் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 3-வது முறையாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 23,494-ல் இருந்து 24,586 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,680 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 1,378 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 1,457 ஆண்கள், 894 பெண்கள் என மொத்தம் 2,351 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 13 - 60 வயதிற்குட்பட்ட 12,218 ஆண்கள், 7,626 பெண்கள் என மொத்தம் 20, 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
ரெயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 1,566 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிறமாநிலங்கள், நாடுகளில் இருந்து வந்த 1,683 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 636 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,170லிருந்து 13,706 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story