மாநில செய்திகள்

ஜூன் 30 வரை பணிக்கு வருவதில் இருந்து மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு விலக்கு - தமிழக அரசு + "||" + Exemption of alternatives to civil servants Government of Tamil Nadu

ஜூன் 30 வரை பணிக்கு வருவதில் இருந்து மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு விலக்கு - தமிழக அரசு

ஜூன் 30 வரை பணிக்கு வருவதில் இருந்து மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு விலக்கு - தமிழக அரசு
ஜூன் 30 வரை பணிக்கு வருவதில் இருந்து மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.
சென்னை,

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அலுவலர்கள் 50% பணிக்கு செல்ல திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு செல்வது சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு இம்மாதம் 30ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளித்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.