கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..?


கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..?
x
தினத்தந்தி 4 Jun 2020 5:37 AM GMT (Updated: 4 Jun 2020 5:37 AM GMT)

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துமனையின் கட்டண விவரங்களை இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு அரசுக்கு பரிந்துரைத்தது.


சென்னை: 

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜி.ராஜேஷ் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மனுவில் புகார் தெரிவித்திருந்தார். வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் தொடர்ந்த பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. 

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் விரைவில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

அந்த வகையில் தற்போது இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு  கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு செய்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது  லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 நிர்ணயம் தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயம் சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றுக்கு தினமும் ரூ.9,600 வசூலிக்கவும் பரிந்துரைத்து உள்ளது. இருப்பினும் ஐ.எம்.ஏ நிர்ணயம் செய்துள்ள இந்த தொகை மிக அதிகமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Next Story