தமிழகத்திற்கு மேலும் 3 ரெயில்கள் இயக்க வாய்ப்பு - ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கடிதம்


தமிழகத்திற்கு மேலும் 3 ரெயில்கள் இயக்க வாய்ப்பு - ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கடிதம்
x

ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின் ரெயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 3 ரெயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

சென்னை

தமிழகத்திற்கு திருச்சி - செங்கல்பட்டு இடையே அரியலூர், விழுப்புரம் மற்றும் தஞ்சை, மாயவரம், விழுப்புரம் வழியாகவும், அரக்கோணம் - கோவை இடையே காட்பாடி, சேலம் வழியாக இன்டர்சிட்டி ரெயில் இயக்கவும், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேவுக்கு தமிழக அரசு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு ஒப்புதல் பெற கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவை உள்ளிட்ட 4 வழி தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 3 வழிதடங்களில் விரைவில் ரயில் இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story