முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை


முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 4 Jun 2020 5:14 PM IST (Updated: 4 Jun 2020 5:14 PM IST)
t-max-icont-min-icon

அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கொரோனா தொற்றுக்கு, இதுவரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

விவரம் வருமாறு:-

*மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

* அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ15000

* 25% படுக்கைகளை காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்

* அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இனி சிகிச்சை பெறலாம்.

* அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிர்ணயம்

* நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

* மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும்.

 மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story