கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்
கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், தமிழகத்தில் கொரோனா புயல் வேகத்தில் பரவுகிறது. பொதுமக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரை சென்ற கொரோனா, தற்பொழுது எம்.எல்.ஏ-வயும் விட்டுவைக்கவில்லை. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2ம் தேதியன்று கொரோனா, மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைச்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ‘வெண்டிலேட்டர்‘ மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story