கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 5 Jun 2020 6:47 PM IST (Updated: 5 Jun 2020 6:47 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை,

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் உயிரிழந்தோர் உள்ளிட்ட தகவல்கள் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது. இறப்பு, பரிசோதனைகளை குறைத்துச்சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.

இந்தியாவில் அதிகபட்சமாக தமிழகத்தில் 5,60,673 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,892 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ஆதாரம், புள்ளி விவரத்துடன் விவரங்களை கூற வேண்டும். தடுப்பூசி மருந்துகள் இல்லாமல் உயிர்காக்கும் வழிமுறைகளை அரசு பின்பற்றுகிறது. ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், ஆலோசனைகளை கூறினால் அரசு ஏற்க தயாராக உள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு ஐ.சி.எம்.ஆர். ரூ.4,500 ஆக கட்டணம் நிர்ணயித்த நிலையில் அரசு ரூ.3000 ஆக குறைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story