தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெயில் பதிவாகும். காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்ய வேண்டாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. லட்சத்தீவு, குமரி கடல், மன்னார் வளைகுடாவில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்
மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை;
50 - 60 கி.மீ. வரை காற்று வீசும் என்பதால் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story