போர்ப்ஸ் இந்தியா தேர்ந்தெடுத்த இந்தியாவின் இணையற்ற 40 கல்வி சேவகர்கள் சைதை துரைசாமியிடம் எழுத்தாளர் சேத்தன் பகத் முதல் பேட்டி
போர்ப்ஸ் இந்தியா தேர்ந்தெடுத்த இந்தியாவின் இணையற்ற 40 கல்வி சேவகர்கள் சைதை துரைசாமியிடம் எழுத்தாளர் சேத்தன் பகத் பேட்டி எடுத்தார்.
சென்னை,
போர்ப்ஸ் இந்தியா தேர்ந்தெடுத்த இந்தியாவின் இணையற்ற 40 கல்வி சேவகர்கள் பட்டியலில் இடம் பிடித்த சைதை துரைசாமியிடம் எழுத்தாளர் சேத்தன் பகத் முதல் பேட்டி எடுத்தார்.
சைதை துரைசாமி
உலக புகழ் பெற்ற போர்ப்ஸ் இந்தியா இதழியல் நிறுவனத்தின் இணைய தொடர், இந்தியாவின் இணையற்ற கல்வி சேவகர்கள் என்று 40 பேரை தேர்வு செய்துள்ளது. அவர்களில் முதலாவதாக சென்னையை சேர்ந்த மனிதநேய ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை நடத்தி வரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த 40 பேரில் முதலாவதாக சைதை துரைசாமியிடம் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத் பேட்டி கண்டார்.
பேட்டியை தொடங்கும்போது, பல்வேறு சர்வதேச அரங்குகளில் பங்குபெற்ற சைதை துரைசாமி மக்களுக்கான மனிதர், சீரிய குணநலன்களை கொண்டவர். சமுதாயத்துக்காக சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவர் இதயத்தில் எப்போதும் உண்டு. பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு வழிகாட்டியான அவர் தமிழகத்தில் உள்ள மக்களின் இதயத்தில் இடம் பெற்றுள்ளார். கல்வி சேவகர் என்ற வகையில் அவருடைய வள்ளல் தன்மைக்காக இங்கிலாந்து நாட்டு இளவரசர் பக்கிங்காம் அரண்மனைக்கு அழைத்திருந்தார் என்று புகழாரம் சூட்டினார்.
வள்ளல் தன்மை
தொடர்ந்து சேத்தன் பகத் கேட்ட கேள்விகளும், அதற்கு சைதை துரைசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- வள்ளல் தன்மை கொண்ட நீங்கள் இதுபோன்ற அறப்பணிகளை குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்கினீர்களா? வளர்ந்த பிறகு தொடங்கினீர்களா?
பதில்:- நான் ஒரு கிராமத்தில் இருந்து வந்து நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கி நடத்தி, அரசியல், வணிகம் இரண்டையும் இணைத்து நடத்திய ஒரு இளைஞன். என்னுடைய தொடக்க காலம் முதலே நான் இந்த சேவையை பிரதானப்படுத்துவதற்கு இரண்டு பேர் காரணம். ஒன்று என்னுடைய அம்மா. இரண்டாவது என்னுடைய அம்மாவைப் போல இன்னொரு முதன்மையான தலைவர் எம்.ஜி.ஆர். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க என்னுடைய பொது வாழ்க்கையில் சேவையை பிரதானப்படுத்திய ஒரு பொது வாழ்க்கையை இதுவரையில் நான் கடைப்பிடித்து வருகிறேன்.
எம்.ஜி.ஆர். கூறிய அறிவுரை
கேள்வி:- மனிதநேய அறக்கட்டளை இலவச திருமண மண்டபம், இலவச மருந்தகம், இலவச பூங்கா, இலவச மருத்துவ வேன் என்று எல்லாமே இலவசம், இலவசம் என பல்வேறு சேவைகள் சமுதாயத்துக்கு இலவசமாக கொடுக்கிறீர்களே.. அதை எப்படி சமாளிப்பீர்கள்?
பதில்:- என்னுடைய தலைவர் எம்.ஜி.ஆர். எனக்கு சொன்ன அறிவுரை என்னவென்றால், உன்னுடைய பொது வாழ்க்கையில் சேவையை பிரதானப்படுத்துகிற பொது வாழ்க்கையை நீ வைத்துக்கொள்ளவேண்டும். சமூகத்துக்கான சேவை என்பதை 1973-ம் ஆண்டு, அவர் அதை அறிவுரையாக சொன்னார். அதை நான் என்னுடைய வாழ்வில் பின்பற்றி தொழில் சம்பாத்தியம், சொத்து சம்பாத்தியம் ஆகியவை அனைத்தும் எனக்கானது அல்ல. பொதுமக்களுக்கு மட்டுமே என்பதன் அடிப்படையில்தான் எனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறேன். உழைத்து சம்பாதித்த பணத்தை எல்லோருக்கும் கொடுப்பது, ஓடி, ஓடி உழைக்கனும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும் இது என் தலைவருடைய திரைப்பட பாடல். ஆகவே அதன் அடிப்படையில் இந்த மனிதநேயம் உருவாக்கப்பட்டது.
கல்வியை காசாக்கக்கூடாது
இதனுடைய நோக்கம் என்னவென்று கேட்டால் இதனை நான் ஏன் இலவசமாக செய்கிறேன், எதற்காக செய்கிறேன் என்றால் அதனை நான் உங்களிடம் சொல்லவேண்டும். அதாவது முதன் முதலாக பொறியியல் கல்லூரி தொடங்குகிறபோது எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஆர்.எம்.வீரப்பன் என்னிடம், 'அப்பா பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கு கொடுக்கிறார்கள், நீ ஆரம்பி' என்று சொன்னார். நான் உடனடியாக அதை மறுத்துவிட்டேன். கல்வியை காசாக்கக்கூடாது. என்னிடத்தில் பொருளாதார வசதி, பணம் இருந்தால் கல்வியை இலவசமாக கொடுப்பேன் என்று 1983-ம் ஆண்டில் உறுதியான முடிவெடுத்தேன்.
அதன் பிறகு என்னிடத்தில் பொருளாதாரம் வந்த பின்னர் ஒரு முடிவு எடுத்தேன். இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்கள், இந்த தூண்கள் வலிமையானதாக இருக்கவேண்டும் என்றால் நல்ல அரசியல்வாதிகளும், நல்ல அதிகாரிகளும் சேர்ந்து பணியாற்றினால் இந்த ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்ற அடிப்படையில், நல்ல அரசியல்வாதியாக நான் என்னை வடிவமைத்து அதன் பாதையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
தீராத ஆசை
ஒரு மக்கள் பிரதிநிதி எப்படி இருக்கவேண்டும் என்ற வகையில் இந்த ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற கடமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உயர் பதவியில் இருக்கிற அதிகாரிகள், நேர்மையானவர்களாக, சேவை மனப்பான்மை உள்ளவர்களாக, லஞ்ச லாவண்யங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தால் இந்த ஜனநாயக கட்டமைப்பு சரியாக இருக்கும் என்ற தீராத ஆசையின் அடிப்படையில் இந்த மனிதநேய அறக்கட்டளை 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
100 பேர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வி அறக்கட்டளை இன்றைக்கு 18 ஆயிரம் பேர்கள் வரை இலவசமாக கல்வி கொடுக்கின்ற ஒரு பணியினை இதுவரையிலும் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இதுவரை 3 ஆயிரத்து 500 பேர்களுக்கு மேலான வெற்றியாளர்களை உயர் பதவியில் உருவாக்கி இருக்கிறோம். 20 ஆயிரம் பேருக்கு மேற்பட்ட கடைநிலை ஊழியர்கள் என மிகவும் பிற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை இந்த பணியில் அமர்த்தியிருக்கிறோம்.
தடையை தகர்த்து...
உதாரணமாக மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலாளி, பரோட்டா மாஸ்டர் உள்ளிட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் பிள்ளைகள், தேநீர் கடை உரிமையாளர் மகன், உணவகங்களில் வேலை செய்பவர்களுடைய மகன், உணவகங்களில் வேலை செய்துகொண்டு படித்து ஐ.ஏ.எஸ். ஆனவர்கள் இப்படி பன்முகத் தன்மையுடைய மக்களுடைய பிரதிநிதிகளை அவர்களுக்கு தகுதி இருந்தும், திறமை இருந்தும் பொருளாதாரம் ஒன்று தான் தடை என்ற அந்த தடையை தகர்த்து, அந்த தகுதிக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்து, அவர்கள் நேர்மையானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், தேசப்பற்று உள்ளவர்களாகவும், மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களாகவும், யாரையும் சாதிகளை கடந்து, மதங்களை கடந்து சக மனிதனை உறவாக எண்ணுகின்ற சிந்தனையை அவர்களுடைய சிந்தனையிலே பதித்து அவர்களை இந்த சமூகத்துக்கு அர்ப்பணிக்கவேண்டும், ஒரு தூய்மையான நிர்வாகத்தை தரவேண்டும். பொதுமக்களுக்கும் அவர்கள் சேவை செய்கின்றபோது, பொதுமக்கள் தங்களிடத்திலே வந்து கூறும்போது அவரை உறவாக எண்ணுகின்ற சிந்தனை, யார் வந்தாலும் அப்பா, அம்மா என்ற வகையில் அவர்களை எண்ணி சேவை செய்கின்ற வகையில், இந்த மனிதநேய அறக்கட்டளை இந்த சமூகத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மன நிறைவு
கேள்வி:- உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது. இதனால் எப்போதாவது மனச்சோர்வு அடைந்திருக்கிறீர்களா?
பதில்:- இது ஒரு மகிழ்ச்சிகரமான பணி. இந்த பணியில் சேவை செய்ய, சேவை செய்ய இது ஒரு போதை. சேவை என்பது ஒரு மகிழ்ச்சி, மன நிறைவு. ஒரு சாதாரணமானவன் என்னிடத்திலே அவன் வருகின்றபோது நான் அவனை பார்க்கிறேன். அவனை பார்க்கின்றபோது அவன் இருந்த தோற்றம், இன்றைக்கு அந்த தோற்றத்தில் இருந்து மாறி, அவன் ஒரு ஐ.ஏ.எஸ். ஆக, ஒரு ஐ.பி.எஸ்., ஒரு ஐ.ஆர்.எஸ். ஆக வருகின்றபோது அதை நான் பார்க்கின்றபோது எனக்கு அதிலே கிடைக்கிற மகிழ்ச்சி, மன நிறைவு அதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை என்பது, மகிழ்ச்சிக்கரமான தருணம் என்பது நான் அவர்களை பார்க்கின்றபோது எனக்கு ஏற்படுகிறதே தவிர, இதில் எந்தவிதமான சோர்வும் எனக்கு இல்லை.
மகிழ்ச்சி
கேள்வி:- உங்களால் உதவி பெற்ற ஏராளமான மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற முக்கிய பணிகளில் தேர்வாகிறார்கள். தேர்வாகியிருப்பதை பார்க்கும்போது உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சி ஏற்படும்?
பதில்:- நான் இந்த தேசத்துக்காக நல்ல சிந்தனையுடைய, நல்ல பண்புகளை உடைய இளைஞனை தயார் செய்து இந்த நாட்டினுடைய நான்கு தூண்களில் ஒரு தூணாக அவனை நிற்க வைத்து, அவன் மிகப்பெரிய அந்த உயர் பதவியிலே அமர்ந்துவிட்டு, என்னை வந்து பார்க்கின்றபோது தமிழிலே திருவள்ளுவர் கூறியதை சொல்வார்கள்.
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
அந்த மகிழ்ச்சி, மன நிறைவு எனக்கு அவர்களை பார்க்கின்றபோது ஏற்படும். ஏனென்றால் அதிகாரத்தினுடைய மைய மண்டபத்தில் அமர்ந்து இருக்கின்ற அந்த காட்சி, அவர் சட்டத்தை உருவாக்குபவராக, ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற காவலனாக இப்படி பன்முகத்தன்மையுடைய வகையில் இந்திய ஜனநாயகத்தில் பல்வேறு பொறுப்புகளை அவர்கள் பெற்று, அந்த பொறுப்புகளிலே அமர்ந்து இருக்கின்றபோது அவர்களை நான் பார்க்கின்றபோது எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியாக இருக்கும். நான் இதைத்தான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.
அந்த தாய் எவ்வளவு மகிழ்ச்சி அடைவாரோ அதைப்போன்ற ஒரு மகிழ்ச்சியை, மன நிறைவை நான் எப்போதும் அவர்களை பார்க்கின்றபோதெல்லாம் பெறுவேன். அதற்கு ஈடு, இணை எதுவும் இல்லை. அந்த மகிழ்ச்சியை, அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இவ்வாறு சைதை துரைசாமி பதில் அளித்தார்.
இறுதியாக சேத்தன் பகத் தனது பேட்டியை முடிக்கும்போது வாழ்வில் பல்வேறு அனுபவங்களை கடந்து வருகிறோம். சில அனுபவங்கள் நம் இதயத்தை தொடுகிறது. சைதை துரைசாமி மிகச்சிறந்த சமூக சீர்த்திருத்தங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறார். இதயம் கவர்ந்த இதுபோன்ற சம்பவங்கள் மற்றவர்களையும், சரித்திரத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கும் என்று கூறி முடித்தார்.

Related Tags :
Next Story