சென்னையில் கொரோனா இறப்பு விவரத்தை மாநில கட்டுப்பாட்டு அறை வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னையில் உள்ள அரசு தனியார் ஆஸ்பத்திரிகள் வாரியாக கொரோனா இறப்பு விவரத்தை மாநில கட்டுப்பாட்டு அறை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘50 சதவீத கொரோனா மரணங்களை அரசு மறைப்பதாகவும், ஜூன் 4-ந்தேதிவரை 398 பேர் இறந்திருப்பதாகவும், ஆனால் அரசு சார்பில் வெளியிடப்படும் கணக்கு 167 மட்டுமே‘, என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல்‘ எனும் அரசின் நடவடிக்கை, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் உயிரைப் பறிக்கும் மிக முக்கிய காரணியாக அமைந்து விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்டவற்றில், தினமும் கொரோனாவிற்காக அனுமதிக்கப்படுவோர் எத்தனை பேர்? இந்த மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலேட்டர்கள் எத்தனை? நோயால் பாதிக்கப்பட்ட எத்தனைப் பேர் வெண்டிலேட்டரில் இருக்கிறார்கள்? கொரோனா நோயால் ஏற்படும் மரணங்கள் எத்தனை? பிற நோய்களால் ஏற்படும் மரணங்கள் எத்தனை? என்பது போன்ற தகவல்கள் ‘கொரோனா மாநில கட்டுப்பாட்டு அறை‘ செய்தி அறிக்கையில் இடம்பெறுவதே இல்லை.
தனியார் மருத்துவமனைகளில் இறப்போர் எண்ணிக்கை பற்றியும் எந்த தகவலையும் வெளியிடுவதில்லை. ‘கட்டுக்கடங்காமல் போகும் கொரோனா நோய்த் தொற்று‘ ‘கணக்கில் வராத மரணங்கள்‘ என்ற ஆபத்தில் சென்னை மாநகர மக்கள் அனுதினமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாநகரத்தில் மட்டும், 20 ஆயிரத்தைத் தாண்டிவிட்ட கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல், அ.தி.மு.க. அரசின் நிர்வாகமே தற்போது வெண்டிலேட்டரில் இருக்கிறது.
158 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் மட்டுமே இறந்துள்ள கோவை மாவட்டத்தின் கலெக்டர் ராஜாமணி, “கொரோனா நோய்த் தொற்றின் வீரியம் இப்போது அதிகமாக இருக்கிறது“ என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். கொரோனா வீரியம் அதிகமாகி விட்டது என்று ஒரு மாவட்ட கலெக்டரே அறிவிக்கிறார். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சரோ, முதல்அமைச்சரோ வாய் திறக்க மறுக்கிறார்கள். ஜூன் 6-ந்தேதி வரை, 20 ஆயிரத்து 993 பேர் பாதிக்கப்பட்டு, 197 பேர் இறந்துள்ளனர். ஆனால் அரசு இதனை மறைத்து வருகிறது.
சென்னை மாநகர மக்கள் நோய்த் தொற்று அச்சத்தில் ஆடிப் போயிருக்கிறார்கள். அது போதாது என்று மரணம் அடைந்தோரின் எண்ணிக்கையை, சரி பாதியாகக் குறைத்து வெளியிட்டு மிகப்பெரிய துரோகத்தை அரசு செய்திருக்கிறது. எனவே சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியா மருத்துவமனைகள் வாரியாக படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையையும், கொரோனா நோயால் இறந்தோரின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநிலக் கட்டுப்பாட்டு அறை வெளியிட வேண்டும்.
சென்னையில் ‘சமூகப் பரவல்‘ வந்து விட்டதா, இல்லையா? என்பது பற்றி ஆய்வு செய்து, அறிவியல்ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றுப் பதற்றத்திலிருந்து மக்களை தமிழக அரசு பத்திரமாக மீட்டுப் பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story