கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு கையாளப்படும் அணுகுமுறை தவறு; டாக்டர் அன்புமணி ராமதாஸ்
கொரோனா வைரஸ் பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அனுப்பி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதுபற்றி பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என கவலை தெரிவித்துள்ள அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதில் கையாளப்படும் அணுகுமுறை, நோய்ப்பரவலை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அனுப்பி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே கொரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அனுப்பி வைப்பதை கைவிட்டு, அவர்களை மருத்துவமனைகள் அல்லது கொரோனா கவனிப்பு மையங்களில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
இவற்றை உறுதி செய்யும் வரை, சென்னையில் என்ன தான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நோய் தொற்றுகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியாது என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story