சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1,149 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,149 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1,515 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். 1,562 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில், சென்னையில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,149 ஆக உள்ளது. இதனால், சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 298 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோன்று சென்னையில் பலி எண்ணிக்கை 212ல் இருந்து 224 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 11 ஆயிரத்து 256 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 11 ஆயிரத்து 817 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை அடுத்து, 2வது இடத்தில் உள்ள செங்கல்பட்டில் 1,988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களில் 788 பேர் குணமடைந்து உள்ளனர். 1,184 பேர் சிகிச்சையில் உள்ளனர். 15 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து 3வது இடத்திலுள்ள திருவள்ளூரில் 1,386 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 732 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கு 14 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story