பெட்ரோல் மீதான வரி உயர்வு குறித்து மத்திய அரசை கடுமையாக சாடிய ப.சிதம்பரம்
பெட்ரோல் மீதான வரி உயர்வு குறித்து மத்திய அரசை ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை,
பெட்ரோல் வரி உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதி-மந்திரி ப.சிதம்பரம், மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், “பெட்ரோல் மீதுள்ள வரியை உயர்த்துகிறார்கள். ஏனென்றால் மத்திய அரசு ஏழை. அதற்கு வரிப் பணம் வேண்டும்.
இன்று பெட்ரோல் சில்லறை விலையை உயர்த்தினார்கள். ஏனென்றால் எண்ணை நிறுவனங்கள் ஏழைகள். அவர்களுக்குப் பணம் வேண்டும்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தாம் பணக்காரர்கள். ஆகவே அவர்கள் என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள் என்று அரசு நினைக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story