‘ஒன்றிணைவோம் வா’ என்பது மக்கள் இயக்கம்: மு.க.ஸ்டாலின் பற்றி குறைகூற எந்த தார்மீக உரிமையும் கிடையாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, கே.என்.நேரு பதில்
‘ஒன்றிணைவோம் வா‘ என்பது மக்கள் இயக்கம் என்றும், மு.க.ஸ்டாலின் பற்றி குறைகூற எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மு.க.ஸ்டாலினின் பணிகளை கொச்சைப்படுத்துவதா?
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரு வெற்று அறிக்கை வெளியிட்டு, எங்கள் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்திருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பூனை கண்ணை மூடிக் கொண்டது போன்ற மனநிலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கொரோனா காலத்திலும் தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆற்றிய பணிகளை கொச்சைப்படுத்துவது தவறு.
விபத்தில் கைப்பற்றிய அ.தி.மு.க.வை தனது குடும்பக் கம்பெனியாக்கி அ.தி.மு.க. அலுவலகத்தையும், அதன் பத்திரிகையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அவருக்கு தி.மு.க. பற்றி பேசவோ, மு.க.ஸ்டாலினின் கொரோனா பேரிடர் காலத்து மக்கள் பணிகள் பற்றி பேசவோ தகுதியில்லை.
அரசியலில் நேருக்கு நேர் கருத்துச் சொல்லி ஜனநாயக ரீதியான வாதங்களை எடுத்து வைக்க தகுதியோ, தார்மீக உரிமையோ கொஞ்சம் கூட இல்லாதவர் எஸ்.பி.வேலுமணி. வரலாறு காணாத நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி பசியாலும் பட்டினியாலும் கிடந்த மக்களைக் காப்பாற்றிட எடுத்த ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சி பற்றி தெரியாத எஸ்.பி.வேலுமணி, அந்த மக்கள் இயக்கம் பற்றி கேள்வி கேட்பது குறுக்குப் புத்தியே தவிர வேறு ஒன்றுமில்லை. தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழும் மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வும் ஆற்றிய கொரோனா பணிகள் மக்களின் மனதில் இடம்பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் ஒப்பந்த ஊழல் என்று எடுத்தால் அதில் முதலிடத்தில் இருப்பது எஸ்.பி.வேலுமணி தான். உள்ளாட்சித் துறையில் சென்னை மாநகராட்சி, கோவை மாநகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, சேலம் மாநகராட்சி என்று 349 ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு அவர் காரணம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி முற்றிலும் தோல்வியடைந்து நிற்கிறது. சென்னை மாநகராட்சியில் கொரனா தடுப்பிற்காக ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு, சிறப்பு அதிகாரி, சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ஐந்து அமைச்சர்கள் குழு போடும் அளவிற்கு உள்ளாட்சி நிர்வாகம் தோல்வியடைந்து நிற்கிறது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. காவலர்களும், மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும் கொரோனாப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள, அங்குள்ள பணத்தை எப்படி கொள்ளையடிப்பது என்பதிலேயே எஸ்.பி.வேலுமணியின் கவனம் இருக்கிறது. தனி அதிகாரிகள் மூலம் 40 மாதங்களுக்கு மேல் உள்ளாட்சி அமைப்புகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி துறையில் ஸ்பிரேயர், கிருமி நாசினி, முகக்கவசம் வரை கொள்முதல் செய்வதில் ஊழல்கள் நடக்கிறது.
இதையெல்லாம் விடுத்து எங்கள் கட்சி தலைவரை பார்த்து விமர்சிப்பது அமைச்சர் பதவி இருக்கிறது என்ற ஆணவத்தில் தானே... தி.மு.க.வினர் உயிராகப் போற்றி மதித்து வரும் எங்கள் கட்சி தலைவர் பற்றி அநாகரிக அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மு.க.ஸ்டாலின் பற்றி குறைகூறுவதற்கு அவருக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story