தமிழகத்தில் ஒரே மாதத்தில் 27,220 பேருக்கு கொரோனா - உயிரிழந்தோர் எண்ணிக்கை 286 ஆக உயர்வு
தமிழகத்தில் கடந்த மே 8-ந்தேதி 6 ஆயிரத்து 9 பேர் கொரோனா பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் 27,220 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த மே மாதம் 8-ந்தேதி அன்று நிலவரப்படி 6 ஆயிரத்து 9 பேர் கொரோனா பிடியில் சிக்கி இருந்தனர். இந்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 27,220 பேர் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஒரே நாளில் 1,520 பேர் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குவைத்தில் இருந்து வந்த 3 பேரும், கத்தாரில் இருந்து வந்த 9 பேரும் மற்றும் வெளிமாநிலங்களான மராட்டியத்தில் இருந்து வந்த 22 பேரும், டெல்லியில் இருந்து வந்த 7 பேரும், ஹரியானாவில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 42 பேருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1,562 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 941 ஆண்களும், 621 பெண்களும் அடங்கி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 20 ஆயிரத்து 575 ஆண்களும், 12 ஆயிரத்து 637 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 17 பேரும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 வயது வாலிபர் உள்பட 17 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று உயிரிழந்தவர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த 12 பேரும், திருவள்ளூரை சேர்ந்த 2 பேரும், விழுப்புரம், காஞ்சீபுரம், ராணிப்பேட்டையை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 528 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 17 ஆயிரத்து 527 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 28 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 1,149 பேரும், செங்கல்பட்டில் 134 பேரும், திருவள்ளூரில் 57 பேரும், வேலூரில் 33 பேரும், தூத்துக்குடியில் 26 பேரும், கள்ளக்குறிச்சியில் 20 பேரும், காஞ்சீபுரத்தில் 18 பேரும், திருவண்ணாமலையில் 11 பேரும், கடலூரில் 10 பேரும், திண்டுக்கலில் 9 பேரும், கன்னியாகுமரி, சிவகங்கையில் தலா 7 பேரும், ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா 6 பேரும், தர்மபுரி, மதுரை, நாகப்பட்டினம், சேலத்தில் தலா 5 பேரும், விருதுநகர், விழுப்புரம், நெல்லை, தஞ்சாவூரில் தலா 4 பேரும், புதுக்கோட்டை, தென்காசி, திருவாருரில் தலா 3 பேரும், தேனி, ஈரோட்டில் தலா 2 பேரும், அரியலூரில் ஒருவரும் இடம்பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 66 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 221 முதியவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆளாகி உள்ளனர் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story