ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு - ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு என ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கி உள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிபட்ட உடனடியே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வரும்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும்.
உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பது தான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story