தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு: மேலும் 1,685 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு: மேலும் 1,685 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 Jun 2020 1:33 PM GMT (Updated: 2020-06-09T19:03:12+05:30)

தமிழகத்தில் மேலும் 1,685 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது.  இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,649 பேர், பிறமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 36 பேர் என 1,685 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 10-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் அரசு மருத்துவமனையில் 15 பேர், தனியார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்தனர்.

இன்று மரணம் அடைந்த 21 பேரில் வேறு எந்த நோய் பாதிப்பும் இல்லாதவர்கள் 5 பேர் என தெரியவந்துள்ளது. கடந்த 4 நாட்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 33,229-ல் இருந்து 34,914 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 23,298லிருந்து 24,545 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 7-வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இதுவரை 244 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 16,279 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 21,666 ஆண்கள், 13,231 பெண்கள், 17 திருநங்கைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை 18,325 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story