தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வருமாறு 8 முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்


தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வருமாறு  8 முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்
x
தினத்தந்தி 10 Jun 2020 6:41 AM IST (Updated: 10 Jun 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வருமாறு 8 முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்து 8 முன்னணி வெளிநாட்டு மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

அக்யூரே, பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ், சீமென்ஸ் ஹெல்த்கேர், சிரோனா டென்டல் சிஸ்டம்ஸ், காப்பியம்ட் இன்டர்நேசனல், ஜிஈ ஹெல்த் கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும், தேவைகளுக்கு ஏற்ப ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உட்பட உலகின் 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.


Next Story