மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு


மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 10 Jun 2020 1:29 PM GMT (Updated: 10 Jun 2020 1:29 PM GMT)

காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லைக்கு மிக அருகில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றை கட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. மிக பிரமாண்டமாக இரு மலைகளுக்கு இடையே கட்ட திட்டமிட்டுள்ள இந்த அணையால் தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருவது முழுமையாக நின்று விடும் அபாயம் உள்ளது. எனவே கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் காணொலி மூலம் நடந்த கூட்டத்தில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற ஆணையம், மேகதாது அணை குறித்து பரிசீலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story