ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ஜி.காளன் காலமானார் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது


ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ஜி.காளன் காலமானார் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 11 Jun 2020 5:23 AM IST (Updated: 11 Jun 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் ஜி.காளன் நேற்று காலமானார்.

சென்னை, 

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐ.என்.டி.யூ.சி.) தலைவர் ஜி.காளன், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவரான ஜி.காளன், சென்னை அம்பத்தூரில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தனது வீட்டிலேயே அவர் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அவர் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

ஜி.காளன், 1991-ம் ஆண்டில் சட்டசபைத் தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஜி.காளன் உடல் இறுதிச் சடங்கு இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்பத்தூர் வெங்கடாபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

ஜி.காளன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story