கோவையில் சிறுமி உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவையில் ஒரே நாளில் 10 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை,
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த சிறுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதேபோன்று சென்னையில் இருந்து கோவை வந்த பயணிகள் மூலமாக மூன்று பெண்களுக்கும், விழுப்புரத்தில் இருந்து கோவை வந்தவர் மூலமாக ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கோவையில் ஒரே நாளில் சிறுமி உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story