தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்;ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்


தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்;ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்
x
தினத்தந்தி 12 Jun 2020 11:47 AM IST (Updated: 12 Jun 2020 11:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


 சென்னை

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் வருவாய் நிர்வாக ஆணையாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பிப்ரவரி 17, 2019 முதல் பதவியில் இருந்த பீலா ராஜேசை மாற்றி  புதிய சுகாதார செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அரசாங்கத்தின் சுகாதார செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், ஐ.ஏ.எஸ்.  முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-க்கு பதிலாக அரசு, வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கபட்டு உள்ளார்.

ஜெ.ராதாகிருஷ்ணன் முதன்மை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் பதவியை மேலும் உத்தரவு வரும் வரை முழு கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.

ராதாகிருஷ்ணன் 2012 முதல் 2019 பிப்ரவரி வரை சுகாதாரத் துறை செயலாளராக இருந்தார். பின்னர் போக்குவரத்து செயலாளராக மாற்றப்பட்டார், 

டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், நெருக்கடி நிலைகளை கையாளும் நிபுணராக நன்கு அறியப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல பேரழிவுகளின் போது அவரை முன்னணி பணியில் ஈடுபடுத்தினார்.

பீலா ராஜேஷின் இடமாற்றம் தமிழ்நாட்டில் ஒரு சலசலப்பை உருவாக்கலாம், மேலும் முக்கியமான கட்டத்தில் அதிகாரி ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்த ஊகங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.  தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து தமிழக அரசு சமீபகாலமாக நிறைய அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.

Next Story