சென்னை: ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது
சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக 4 ஆயிரத்து 821ஆக உள்ளது.
சென்னை
சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 924ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக 4 ஆயிரத்து 821ஆக உள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 781ஆகவும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 464ஆகவும், கோடம்பாக்கத்தில் 3 ஆயிரத்து 108ஆகவும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.திருவொற்றியூர்-1072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அண்ணாநகரில் 2 ஆயிரத்து 781ஆகவும், திருவிக நகரில் 2 ஆயிரத்து 660ஆகவும், அடையாறில் ஆயிரத்து 607ஆகவும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 268ஆகவும் உயர்ந்துள்ளது.
இதன்மூலம் 9 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 614 பேர் குணமான நிலையில், 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
Related Tags :
Next Story