திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு - சட்டப் பேரவைச் செயலகம் அறிக்கை வெளியீடு


திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு - சட்டப் பேரவைச் செயலகம் அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 15 Jun 2020 6:36 PM IST (Updated: 15 Jun 2020 6:36 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதித்து உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவித்து சட்டப் பேரவைச் செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை,

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த ஜூன் 10-ந் தேதி பலியானார். இந்நிலையில் அவரது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவித்து பேரவைத் தலைவர் தனபால் மற்றும் பேரவைச் செயலர் ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஒரு சட்டப் பேரவைத் தொகுதி காலியான தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால் காலியான தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவுக்கும், அடுத்து வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கும் இடையிலான இடைவெளி ஓராண்டுக்கும் குறைவாக இருந்தால் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடாது.

அதே சமயம் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இடைத் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என்று கருதப்படுகிறது.

Next Story