திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா பாதிப்பு


திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2020 11:47 AM IST (Updated: 17 Jun 2020 11:47 AM IST)
t-max-icont-min-icon

திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது. 

இந்நிலையில் இன்று திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக உடைந்தபோது தினகரன் அணிக்குச் சென்று அங்கு ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக திமுகவில் இணைந்தார். திமுகவில் முக்கிய நிர்வாகியான இவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெ. அன்பழகன்(61) சமீபத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில், இப்போது இவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story