கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் -முதல்வர் பழனிசாமி


கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் -முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 20 Jun 2020 12:13 PM IST (Updated: 20 Jun 2020 12:13 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படியே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது. முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது கொரோனாவை தடுக்கத்தான். சென்னையில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை கொரோனா பரவலை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

மக்கள்தான் அரசாங்கம் தனியாக அரசாங்கம் என்று ஒன்று இல்லை. ஆகவே மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே இந்த கொரோனா  நோயை தடுக்க முடியும். முகக்கவசங்களை அணிந்து, கைகளைக் கழுவி அடிப்படை சுகாதார வழிகளை கட்டாயமாக மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளி, முக கவசம் தான் ஒரே வழி.

மக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதித்த 54% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தினமும் கொரோனா பரிசோதனை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தனக்கு கொரோனா தொற்று இல்லை என  அமைச்சர் கே.பி.அன்பழகனே மறுத்துள்ளார் என கூறினார்.

Next Story