ஊரடங்கு காரணமாக ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு
ஊரடங்கு காரணமாக ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான காலவரையறையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஊரடங்கு காரணமாக ஜூலை 15-ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 4 மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 15-ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் மின் நுகர்வோர்கள் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை இணையத்தில் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும், ஜூலை 15-ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என்று அலுவலர்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Related Tags :
Next Story