கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் இதுவரை நடைபெறாததால் அது குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து அரசு இன்னும் முடிவெடுக்காமல் இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மன அழுத்தத்தை அதிகப்படுத்தி இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிட வேண்டும் என்று தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே,கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிட வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைப் போல இதிலும் கடைசி வரை அரசு குழப்பிக் கொண்டே இருக்காமல் விரைவாக முடிவெடுக்க வேண்டும். 3/3 @CMOTamilNadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 22, 2020
Related Tags :
Next Story