தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2020 5:39 PM IST (Updated: 23 Jun 2020 5:39 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பாட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய அறிவிப்பில் சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது;-

“அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story