தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு


தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2020 6:55 PM IST (Updated: 23 Jun 2020 6:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 44,205 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 25,148 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தமாக 9,44,352 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான திருவள்ளூரில் இன்று 156 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 59 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் இன்று 137 பேருக்கும், திருவண்ணாமலையில் 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 39 பேர் கொரனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 623 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 1,227 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 28,428 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 More update

Next Story