அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி


அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 25 Jun 2020 12:55 PM GMT (Updated: 25 Jun 2020 12:55 PM GMT)

அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

ஈரோடு,

கோவையில் ரூ.72.40 கோடியிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்தும், அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை ஆய்வு நடத்தவும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை சென்றார்.

முதலில் கோவையில் ரூ.72.40 கோடியிலான பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து முதல்-அமைச்சர் தலைமையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் ஈரோடு சென்றார். 

இந்நிலையில் ஈரோடு பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி ஊராட்சி சோளிபாளையத்தில் நடந்து வரும் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை முதல்-அமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். மேலும் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார். 

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

ரூ.1652 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றம். விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறோம். அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம். திட்டத்தின் மூலம் ஏராளமான ஏரிகள், குளங்களை பவானி ஆற்று நீரால் நிரப்பவும் திட்டம். 3 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலன் அடைவார்கள். குடிநீர் உள்ளிட்ட பலன்கள் மக்களுக்கு கிடைக்கும்.

2021ம் ஆண்டு இறுதிக்குள் திட்டம் நிறைவேற்றப்படும். முற்றிலும் மாநில அரசின் நிதியில் இருந்து திட்டம் நிறைவேற்றம். அறிவிக்கப்படும் திட்டங்களை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறோம். 

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மழைநீரை சேமிக்கும் வகையில் குடிமராமத்து பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story