சென்னை காவல்துறையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது


சென்னை காவல்துறையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 26 Jun 2020 9:05 AM GMT (Updated: 26 Jun 2020 9:05 AM GMT)

சென்னை காவல்துறையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்ததுள்ளது.

சென்னை, 

சென்னை மாநகர போலீசில் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது.  இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் ஆயுதப்படை போலீசார் வரை கொரோனா பிடியில் சிக்கி வருகிறார்கள். 

சென்னை போலீசில் 976 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலை வரை புதிதாக மேலும் 29 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,005 ஆக உயர்ந்துள்ளது. புதிய பாதிப்பில் அதிகாரிகள் யாரும் இடம் பெறவில்லை.

மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சன், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, மத்திய குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, பழவந்தாங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாமூண்டிஸ்வரி ஆகியோர் உள்பட 28 போலீசார் பூரண குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பினார்கள். 

இதையடுத்து சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து மீண்டு, பணிக்கு திரும்பிய போலீசாரின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்து உள்ளது.


Next Story